Preserving and propagating the ancient Tamil spiritual wisdom of Siddhar Thirumoolar
திருமூலப் பெருமானை குரு முதல்வராக சிரம் மேற்கொண்டு திருக்கோவில் அமைத்து சைவ சமய அடியார்கள் மற்றும் பக்தர்கள் கட்டாயம் திருமுறை வழியில் பாராயணம் செய்ய வழிவகை செய்தல்.
To establish Thirumoolar as the primary guru and create temples where Saivite devotees and followers can regularly recite the Thirumurai texts.
சைவ நெறியில் சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடுகுத்த சைவம் என்ற நான்கு பிரிவுகள் மூலம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற முறைப்படி முக்தி நெறியை உபதேசம் செய்து திருவடிப்பேறு என்ற நிலையை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
To teach the path of liberation through the four divisions of Saivism following the stages of Chariyai, Kiriyai, Yoga, and Jnana, to help all people attain the state of Thiruvadiperu (divine feet attainment).
திருமூலப் பெருமானை குரு முதல்வராக சிரசு மேற்கொண்டு, திருக்கோவில் அமைத்து, சைவ சமய அடியார்கள் மற்றும் பக்தர்கள் திருமுறை வழியில் பாராயணம் செய்ய வழிவகை செய்தல்.
To establish Thirumoolar as the primary guru and create temples where Saivite devotees and followers can regularly recite the Thirumurai texts.
திருமந்திர முறையிலும் திருமுறை வழியிலும் பூஜைகள் செய்தல்.
To perform worship according to the Thirumantram method and Thirumurai tradition.
திருமந்திரத்தில் உள்ள ஒழுக்க அறநெறிகளை உணர்தல், கேட்டல், சிந்தித்தல், தெளிவடைதல் மற்றும் தியானித்தல் போன்ற சித்தாந்தக் கொள்கைகளை பின்பற்ற வழிவகை செய்தல்.
To facilitate listening, reflection, clarity, and meditation on the ethical principles in the Thirumandiram, and to encourage the practice of Siddhanta teachings.
ஆகமங்களை கற்றுணர்தல், பிராணாயாமம் மற்றும் யோகப் பயிற்சி செய்தல்.
To study the Agamas and to practice Pranayama and Yoga.
சைவ நெறியில் சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடுங்குத்த சைவம் என்ற நான்கு பிரிவுகள் உள்ளன. அவற்றின் வழியாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற முறைப்படி சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தசாமார்க்கம் ஆகிய மார்க்க நெறிகளை எடுத்துரைத்து, சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுஜ்யம் என்ற முக்தி நிலைகளை உபதேசம் செய்து, இறுதியில் திருவடிப்பேறு என்ற பரமநிலையை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
To teach the path of liberation through the four divisions of Saivism — Suddha Saivam, Asuddha Saivam, Marka Saivam, and Kadunkutha Saivam. Through the stages of Chariyai, Kiriyai, Yoga, and Jnana, and the disciplines of Sanmarkam, Sahamarkam, Sarputhra Markam, and Dasa Markam, devotees are guided towards the states of Salokam, Samipam, Sarupam, and Sayujyam, ultimately leading all people to attain the supreme state of Thiruvadiperu.
சைவ சமய பணிகள்
அன்னதானம் செய்தல், பழமையான சிவாலயங்கள் கட்டுவதற்கு பணமும் பொருளும் உதவி செய்தல், மண்ணில் புதைந்ததோ அல்லது வெளியில் காணப்படுகின்ற பழமையான சிவலிங்கங்களை மீட்டு வழிபாட்டுக்கு கொண்டு வருதல்.
Offering free meals, supporting the construction of ancient Shiva temples with financial and material aid, and restoring ancient Shiva Lingams found underground or in the open for worship.
பாடசாலை அமைத்தல்
திருமூலர் குருபீடம் பாடசாலை அமைத்து, சைவ சித்தாந்தம், வேதாந்தம், யோகம், தியானம், திருமுறை, சைவ ஆகமம், கைலாய வாத்தியம், தற்காப்பு, நாட்டியக் கலை ஆகியவற்றில் தகுதியான ஆசிரியர்களை நியமித்து, சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கல்வி வழங்குதல்.
Establishing educational institutions under the Thirumoolar Gurupedam to provide training in Saiva Siddhanta, Vedanta, Yoga, meditation, Thirumurai, Saiva Agama, traditional instruments, self-defense, and classical dance, with qualified teachers for all age groups.
வாழ்வாதார மேம்பாடு
நலிவுற்ற சிவன் அடியார்கள், பெண் சிவனடியார்கள், சைவ சமயத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள், மற்றும் ஆதரவு இல்லாத மக்கள் ஆகியோருக்காக வாழ்வாதார மேம்பாடு செய்து, சுயதொழில் தொடங்க பயிற்சி அளித்து, தொழில் தொடங்க உதவி செய்தல்.
Providing livelihood development and training for disadvantaged Saivite devotees, including priests, women devotees, differently-abled individuals, and those without support, to help them start their own businesses.
திருமுறை பாராயணம்
இல்லம் தோறும் திருமுறைகள், திருவாசகம், திருமந்திரம் ஆகியவற்றை ஓதுவதற்கு வழிவகை செய்தல், மேலும் திருக்கோவில்களில் தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற திருமுறைகளை பாராயணம் செய்ய ஏற்பாடு செய்தல்.
Facilitating the recitation of Thirumurai, Thiruvasagam, and Thirumanthiram in homes, and organizing regular recitations of Thevaram, Thiruvasagam, and Thirumanthiram in temples.
திருமூலர் குருபீடம் மற்றும் ஆலயம் அமைத்தல்
நமது கோவை மாவட்டத்தில் திருமூலர் குருபீடம் அமைத்து, திருமந்திரம் வழிபாட்டு முறையின் படி சிவபூஜை, கோபூஜை, யாகபூஜை ஆகியவற்றில் அனைவருக்கும் பயிற்சி அளித்து, அவர்கள் இல்லங்களில் வழிபாடுகள் செய்ய வழிவகை செய்தல்.
Establishing the Thirumoolar Gurubeedam in Coimbatore district to provide training in Shiva Puja, Go Puja, and Yaga Puja according to the Thirumanthiram, enabling devotees to conduct worship in their homes.
சைவ சமய தல யாத்திரை
272 சைவ திருத்தலங்களுக்கு மக்களை அழைத்துச் செல்லுதல், அத்தலங்களின் பழமை, வரலாறு மற்றும் மகத்துவத்தை அறிவித்தல், மேலும் அனைத்து பழமையான சிவாலயங்களுக்கு புனித யாத்திரை ஏற்பாடு செய்தல்.
Organizing pilgrimages to the 272 Saiva sacred sites, explaining the antiquity, history, and significance of these shrines, and facilitating holy journeys to all ancient Shiva temples.